மக்கள் மீது வரம்பற்ற வரிச்சுமையை அரசாங்கம் திணித்துள்ளது – எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ

Mayoorikka
3 years ago
மக்கள் மீது வரம்பற்ற வரிச்சுமையை அரசாங்கம் திணித்துள்ளது – எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ

பெரும் இன்னல்களுக்கு மத்தியில் வாழ்க்கையை நகர்த்தும் மக்கள் மீது, புதிய வரிச்சுமையை விதிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகவும் மக்கள் மீது வரம்பற்ற அழுத்தத்தை ஏற்படுத்தும் விசித்திரமான வரியாக இது மாறியுள்ளதாகவும் எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவின் எண்ணக்கருவை அடிப்படையாகக்கொண்டு செயல்படுத்தப்படும் ‘பிரபஞ்சம்’ வேலைத்திட்டத்தின் கீழ், பல இலட்சம் ரூபாய் பெறுமதியான பஸ்ஸொன்று காலி சித்தார்த்த தேசிய பாடசாலைக்கு வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அரச வருமானத்தை அதிகரிப்பதற்குள்ள ஒரேவழி, வரி அதிகரிப்பு மாத்திரமல்ல.

பண்டோரா பத்திரங்கள் மூலம் பெயரிடப்பட்ட நபர்கள் வைத்திருக்கும் டொலர்களையும் நாட்டிற்குக் கொண்டு வர வேண்டும்.

அரசாங்கம் பொருளாதார ரீதியாகவும் போலவே கருத்தியல் ரீதியாகவும் கூட வங்குரோத்து நிலையிலேயே உள்ளது.

77 வருடங்களாக இருந்து வந்த எதிர்க் கட்சிகள் வேறு. தற்போது இருக்கும் ஐக்கிய மக்கள் சக்தி என்பது மிகவும் வித்தியாசமான கட்சியாகும்.

ஜனநாயக வரலாற்றில் எந்தக் கட்சியானது 35 பாடசாலைகளுக்கு பல இலட்சம் ரூபாய் பெறுமதியான பஸ்களை அன்பளிப்பு செய்துள்ளது?

எமது நாட்டின் வரலாற்றில் வைத்தியசாலைகள், பாடசாலைகளில் தொழில்நுட்ப வளர்ச்சிக்காக எந்த எதிர்க் கட்சி முன்னின்று செயற்பட்டு இருக்கின்றது..

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4