மோசமான வானிலையால் 21,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்
சீரற்ற காலநிலை காரணமாக 11 மாவட்டங்களின் 34 பிரதேச செயலகப் பிரிவுகளில் 21,888 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இதுவரை 03 மரணங்கள் பதிவாகியுள்ளதாக அதன் பணிப்பாளர் நாயகம், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்க தெரிவித்துள்ளார்.
வரகாபொல, தும்பலிஎத்த பகுதியில் அமைந்துள்ள இரண்டு மாடி வீடொன்றின் மீது மண்மேடு சரிந்து விழுந்ததில் காணாமல் போன இருவரின் சடலங்களும் அவர்களுள் அடங்கும். அந்த வீட்டில் இருந்த 47 வயதுடைய பெண்ணின் சடலம் இன்று காலை கண்டெடுக்கப்பட்டுள்ளது. அதன் பின்னரே 24 வயதுடைய இளைஞனின் சடலம் கண்டெடுக்கப்பட்டதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
வீட்டின் மீது மண் மேடு சரிந்து விழுந்ததில் 3 பேர் வீட்டில் தங்கியுள்ளனர்.
அவர்களில் ஒருவர் மீட்கப்பட்டு வரக்காபொல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்க தெரிவித்துள்ளார்.
மோசமான வானிலை காரணமாக 264 பேர் தற்போது 4 பாதுகாப்பான மையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
களனி, பட்டியாவெல நீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு அருகிலுள்ள பாலத்தின் மீது கனரக வாகனங்களை செலுத்த வேண்டாம் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.