உணவுப் பிரச்சினையை தீர்க்க அனைவரும் ஒன்றிணைய வேண்டும்: ஜனாதிபதி
பாரம்பரிய கட்சி அரசியலை புறக்கணித்து உணவுப் பாதுகாப்பை உருவாக்கி மக்களின் உணவுப் பிரச்சினையைத் தீர்க்கும் வேலைத்திட்டத்தில் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
அம்பாறை ஹார்டி மேம்பட்ட தொழில்நுட்ப நிறுவனத்தில் நடைபெற்ற உணவுப் பாதுகாப்பு மற்றும் போஷாக்கை உறுதிப்படுத்தும் கிராமிய பொருளாதார மையங்களை வலுவூட்டுவதற்கான பல்துறை ஒருங்கிணைந்த பொறிமுறை குறித்து அரச அதிகாரிகளுக்கு விளக்கமளிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, தமன பிரதேச செயலகப் பிரிவில் மேற்கொள்ளப்பட்டு வரும் பயிர்ச்செய்கை நடவடிக்கைகள் மற்றும் அப்பிராந்தியத்தில் ஊட்டச்சத்து குறைபாட்டினால் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்கள் தொடர்பிலும் கேட்டறிந்தார்.
உணவு பாதுகாப்பு வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படும் அதேவேளை விவசாய நவீனமயமாக்கல் வேலைத்திட்டம் அடுத்த வருடம் முதல் நடைமுறைப்படுத்தப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அங்கு வலியுறுத்தினார். அதற்காக கட்சி அரசியலை புறந்தள்ளிவிட்டு ஒன்றிணைய வேண்டும் எனவும் ஜனாதிபதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.