திருட்டினால் பொருளாதாரம் அழிந்தது.. இன்று வாழ வழியில்லை: பேராயர்

Prathees
1 year ago
திருட்டினால் பொருளாதாரம் அழிந்தது.. இன்று வாழ வழியில்லை: பேராயர்

திருட்டு, ஊழல், வன்முறை, பயங்கரவாதம் போன்றவற்றால் ஏற்பட்டுள்ள பொருளாதார அழிவு இன்று மக்களால் முடியாத நிலையை உருவாக்கியுள்ளது என கொழும்பு பேராயர் மல்கம் ரஞ்சித் கர்தினால் அருட்தந்தை தெரிவித்துள்ளார்.

இந்த நாட்டில் சில தலைவர்கள் இன வேறுபாடுகளை உருவாக்கி அதனை விற்று அதிகாரத்தை பெற்றுள்ளதாகவும் ஈஸ்டர் தாக்குதலை அடிப்படையாக கொண்டு மதங்களுக்கு இடையில் வேறுபாடுகளை ஏற்படுத்த முயற்சிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

திருட்டு, ஊழல், வன்முறை, பயங்கரவாதம் ஆகியவை நாட்டின் பொருளாதார அழிவை ஏற்படுத்தியது.

இன்று இந்த நாட்டின் ஒவ்வொரு மக்களும் அசௌகரியமான வாழ்க்கையை வாழ்ந்து வருவதாக அவர்கள் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.

அளுத்கமவில் உள்ள தேவாலயம் ஒன்றில் அவர் தனது  கருத்துக்களை வெளியிட்டார்.