யாழில் வீடொன்றில் போதைமாத்திரை மற்றும் ஹெரோயின் வைத்திருந்த குற்றச்சாட்டில் ஐவர் கைது
#Jaffna
#drugs
Prasu
2 years ago
யாழில் வீடொன்றில் போதைமாத்திரை மற்றும் ஹெரோயின் வைத்திருந்த குற்றச்சாட்டில் 05 நபர்கள் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவமானது யாழ்.கோப்பாய் – செல்வபுரம் மற்றும் ஊரெழு முருகன் வீதி ஆகிய பகுதிகளில் இடம்பெற்றுள்ளது.
கோப்பாய் பொலிஸ் நிலையப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. செல்வபுரம், ஊரெழு முருகன் வீதி பகுதிகளில் ஹெரோயின் மற்றும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வருகின்றனர்
இரண்டு வியாபாரிகள் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த கோப்பாய் பொலிஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.