அசாதாரண காலநிலை தொடரும் - வளிமண்டலவியல் திணைக்களம்

Reha
1 year ago
அசாதாரண காலநிலை தொடரும் - வளிமண்டலவியல் திணைக்களம்

இலங்கைத் தீவைச் சுற்றியுள்ள வெப்பமண்டல குவிப்பு வலயத்தின் தாக்கம் காரணமாக, தற்போதைய கடும் மழையுடன் கூடிய காலநிலை தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடிய சாத்தியம் உள்ளதாக திணைக்களத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமாக பலத்த மழை பெய்யக்கூடிய சாத்தியம் உள்ளது.

தீவின் ஏனைய பகுதிகளில் மாலை அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். மேலும் சில இடங்களில் 75 மி.மீட்டருக்கும் அதிகமாக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
 
இடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில் தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை குறைத்துக்கொள்ள தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் மக்களை கேட்டுக்கொள்கிறது.