துருக்கி சுரங்க வெடிவிபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 41 ஆக உயர்வு

#Accident #Death
Prasu
3 years ago
துருக்கி சுரங்க வெடிவிபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 41 ஆக உயர்வு

துருக்கியில் கருங்கடல் பகுதி அருகே அமைந்துள்ள பர்டின் மாகாணத்தின் அம்சரா நகரில் நிலக்கரி சுரங்கம் ஒன்று செயல்பட்டு வருகிறது. 

இந்த நிலக்கரி சுரங்கத்தில் நேற்று முன்தினம் தொழிலாளர்கள் வேலை செய்துகொண்டிருந்தனர். நூற்றுக்கும் அதிகமானோர் சுரங்கத்தில் வேலை செய்துகொண்டிருந்தனர். 

அப்போது, நிலக்கரி சுரங்கத்தில் திடீரென வெடிவிபத்து ஏற்பட்டது. இதில் வேலை செய்துகொண்டிருந்த பலரும் சிக்கிக்கொண்டனர். 

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மீட்புக்குழுவினர் சுரங்கத்தில் சிக்கிய 50-க்கும் மேற்பட்டோர் உயிருடன் மீட்டனர். 

இந்நிலையில், நிலக்கரி சுரங்க வெடிவிபத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 41 ஆக உயர்ந்துள்ளது. மீட்புப்பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4