அனைத்து ராசிக்குமான இன்றைய ராசி பலன் 17.10.2022

#Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan
Prasu
1 year ago
அனைத்து ராசிக்குமான இன்றைய ராசி பலன் 17.10.2022

மேஷம்
அசுவினி : நீங்கள் நினைத்ததை நிறைவேற்றி மகிழ்வீர்கள். எதிர்பார்த்த பணம் வீடு தேடிவரும்.
பரணி : நண்பர்கள் ஒத்துழைப்புடன் உங்கள் செயலில் முன்னேற்றம் காண்பீர்கள்.
கார்த்திகை 1: பணியிடத்தில் ஏற்பட்ட பிரச்னைகளை சரி செய்வீர்கள். நிம்மதி ஏற்படும்.

ரிஷபம்
கார்த்திகை 2, 3, 4 : கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவீர்கள். பொன் பொருள் சேர்க்கை உண்டு.
ரோகிணி : வியாபாரத்தில் திருப்பம் ஏற்படும். எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.
மிருகசீரிடம் 1, 2 : வரவேண்டிய பணம் வந்து சேரும். பழையகடனை அடைப்பீர்கள்.

மிதுனம்
மிருகசீரிடம் 3,4 : புதிய முயற்சிகள் இழுபறியாகும். செயல்களில் தடுமாற்றம் உண்டாகும்.
திருவாதிரை : உங்கள் எதிர்பார்ப்பு தள்ளிப்போகும். மனதில் குழப்பம் ஏற்படும்.
புனர்பூசம் 1, 2, 3 : பணியில் கூடுதல் கவனம் தேவை. பொறுமை அவசியம்.

கடகம்
புனர்பூசம் 4 : உறவினர் ஒருவரால் சங்கடம் தோன்றி மறையும். வீட்டிற்கான செலவு அதிகரிக்கும்.
பூசம் : குடும்பத்திலுள்ள ஒருவரால் சிறு பிரச்னை தோன்றும். வார்த்தைகளில் கவனம் தேவை.
ஆயில்யம் : பணியிடத்தில் நெருக்கடியை சந்திப்பீர்கள். மேலதிகாரியுடன் மோதல் உண்டாகும்.

சிம்மம்
மகம் : உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறும். தொழிலில் ஆதாயம் ஏற்படும்.
பூரம் : வி.ஐ.பிகளின் ஆதரவுடன் உங்கள் விருப்பம் ஒன்று நிறைவேறும்.
உத்திரம் 1 : தடைபட்டிருந்த செயல் நிறைவேறும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

கன்னி
உத்திரம் 2, 3, 4 : வியாபாரத்தில் உங்கள் அணுகுமுறை முன்னேற்றத்தை உண்டாக்கும் நாள்.
அஸ்தம்: பணிபுரியும் இடத்தில் உங்கள் ஆலோசனையை ஏற்பார்கள். உங்கள் மதிப்பு உயரும்.
சித்திரை 1, 2: துணிச்சலுடன் செயல்பட்ட ஒரு செயலில் வெற்றி காண்பீர்கள்.

துலாம்
சித்திரை 3, 4 : உங்கள் அணுகுமுறையால் நேற்றைய பிரச்னையில் தீர்வு உண்டாகும்.
சுவாதி : ஒரு சிலருக்கு புதிய வேலை வாய்ப்பு அமையும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
விசாகம் 1, 2, 3: உத்தியோகத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்கு வரும். ஊழியர்களின் ஆதரவு அதிகரிக்கும்.

விருச்சிகம்
விசாகம் 4 : பழைய பிரச்னை ஒன்று மீண்டும் தலையெடுக்கும். மனதில் குழப்பம் தோன்றி மறையும்.
அனுஷம் : ஆவலுடன் எதிர்பார்த்த ஒன்று இழுபறியாகும். வீண் அலைச்சலும் செலவும் உண்டாகும்.
கேட்டை : பயணத்தில் கவனம் தேவை. பண விஷயத்தில் எச்சரிக்கை அவசியம்.

தனுசு
மூலம் : உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். நீண்ட நாள் எண்ணம் ஒன்று நிறைவேறும்.
பூராடம் : நண்பர்களால் ஆதாயம் அடைவீர். குடும்பத்தினரின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள்.
உத்திராடம் 1 : நாளைய வேலைகளுக்காக இன்று முன்னேற்பாடு செய்வீர்கள்.

மகரம்
உத்திராடம் 2, 3, 4 : வியாபாரத்தில் இருந்த நெருக்கடி விலகும். மறைமுகத் தொல்லை அகலும்.
திருவோணம் : வழக்கு ஒன்று உங்களுக்கு சாதகமாகும். தொழிலில் விரோதிகள் விலகிச் செல்வர்.
அவிட்டம் 1, 2 : உத்தியோகத்தில் உங்கள் நிலை உயரும். மேலதிகாரியின் ஆதரவால் நினைத்ததை அடைவீர்.

கும்பம்
அவிட்டம் 3, 4 : பிள்ளைகளின் நலனில் அக்கறை செலுத்துவீர்கள். பொன் பொருள் சேர்க்கை உண்டு.
சதயம் : உறவினர்களால் ஏற்பட்ட தொல்லை விலகும். புதிய முயற்சி ஒன்றில் ஈடுபடுவீர்கள்.
பூரட்டாதி 1, 2, 3 : நீண்டநாள் எண்ணம் ஒன்று நிறைவேறும். குடும்பத்தின் தேவைகளை பூர்த்தி செய்வீர்.

மீனம்
பூரட்டாதி 4 : எதிர்பார்ப்பு நிறைவேறும். நீங்கள் விரும்பிய ஒன்றை போராடி அடைவீர்கள்.
உத்திரட்டாதி : பணியிடத்தில் சில சங்கடத்தை சந்திப்பீர்கள். அமைதி காப்பது நன்மையாகும்.
ரேவதி : வியாபாரத்தில் கூட்டாளிகளால் ஏற்பட்ட பிரச்னைகளுக்கு சுமூக முடிவு காண்பீர்கள்.