உபாதை காரணமாக உலகக்கோப்பை தொடரில் இருந்து விலகிய வேகப்பந்து வீச்சாளர் துஷ்மந்த சமீரா

Prasu
3 years ago
உபாதை காரணமாக உலகக்கோப்பை தொடரில் இருந்து விலகிய வேகப்பந்து வீச்சாளர் துஷ்மந்த சமீரா

இலங்கை வேகப்பந்து வீச்சாளர் துஷ்மந்த சமீர, காலில் ஏற்பட்ட காயம் காரணமாக இந்த ஆண்டு ரி 20 கிரிக்கெட் போட்டிகளில் இருந்து விலகியுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

துஷ்மந்த சமீரவுக்கு பதிலாக கசுன் ராஜிதவை இலங்கை அணிக்கு அழைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு எதிரான நேற்றைய போட்டியில் துஷ்மந்த சமீரவின் காலில் காயம் ஏற்பட்டது.

மருத்துவப் பரிசோதனைகளுக்குப் பிறகு, அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, டில்ஷான் மதுசங்கவின் காயம் காரணமாக மேலதிக வீரராக இருந்த பினுர பெர்னாண்டோ 15 பேர் கொண்ட குழுவில் இணைக்கப்பட்டிருந்தார்.

15 பேர் கொண்ட குழுவிற்குள் பினுர வரவிருப்பதால் வெற்றிடமான இடத்திற்கு மேலதிக வீரராக அசிதா பெர்னாண்டோ பெயரிடப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4