பரந்தனில் உள்ள இரசாயன தொழிற்சாலையின் செயற்பாடுகள் மீண்டும் ஆரம்பம் - ரமேஷ் பத்திரன
யாழ்ப்பாணம் பரந்தனில் உள்ள இரசாயன தொழிற்சாலையின் செயற்பாடுகளை அரசாங்கம் உடனடியாக ஆரம்பிக்க உள்ளதாக பெருந்தோட்ட கைத்தொழில் மற்றும் கைத்தொழில் அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார்.
தொழிற்சாலை பகுதிக்கு ஆய்வுக்காக சென்ற போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். இந்த தொழிற்சாலை திரவ குளோரின், ஹைட்ரோகுளோரிக் அமிலம், துத்தநாக குளோரைட் மற்றும் ஃபெரிக் குளோரைட் ஆகியவற்றை மூலப்பொருளாக பயன்படுத்தி 1954 ஆம் ஆண்டு இரசாயன உற்பத்தி செயல்முறையை ஆரம்பித்ததாக தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில் 1985ல் உள்நாட்டுப் போர் காரணமாக தொழிற்சாலையின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. இருப்பினும், உள்ளூர் உற்பத்தித் தேவைகளுக்குத் தேவையான இரசாயனங்கள் வேறு பல நிறுவனங்கள் மூலம் இறக்குமதி செய்யப்படுகின்றன.
இதேவேளை முதல் கட்டமாக, கொஸ்டிக் சோடா, குளோரின் ஹைட்ரோகுளோரிக் அமிலம், பொலிஅலுமினியம் குளோரைட் ஆகியவற்றை உற்பத்தி செய்வதற்கான ஆரம்ப நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.