இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராக 7 ஆயிரத்து 897 வாக்குகள் பெற்று மல்லிகார்ஜுன கார்கே தெரிவு

Kanimoli
2 years ago
இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராக 7 ஆயிரத்து 897 வாக்குகள் பெற்று மல்லிகார்ஜுன கார்கே தெரிவு

இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராக 7 ஆயிரத்து 897 வாக்குகள் பெற்று மல்லிகார்ஜுன கார்கே தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
அவரை எதிர்த்து போட்டியிட்ட சசிதரூர் 1000 வாக்குகளை பெற்று தோல்வியடைந்தார். 
416 வாக்குகள் செல்லாதவை என அறிவிக்கப்பட்டன. ஷ
தேர்தலில் மல்லிகார்ஜுன கார்கே வெற்றி பெற்றதை அடுத்து காங்கிரஸ் வரலாற்றில் 24 ஆண்டுகளுக்கு பின்னர், நேரு குடும்பத்தை சாராத ஒருவர் காங்கிரஸ் தலைவர் ஆவது உறுதியாகி உள்ளது.
கடந்த 2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்ததால், காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து ராகுல்காந்தி விலகினார். 
இடைக்கால தலைவராக சோனியாகாந்தி பொறுப்பேற்றார். இதைத்தொடர்ந்து, கட்சிக்கு முழுநேர தலைவரை தேர்ந்தெடுக்க கடந்த 17 ஆம் திகதி தேர்தல் நடத்தப்பட்டது. 
மல்லிகார்ஜுன கார்கேவும், சசிதரூரும் போட்டியிட்டனர். நாடு முழுவதும் 68 இடங்களில் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு இருந்தன.
9 ஆயிரத்து 915 மாநில காங்கிரஸ் குழு பிரதிநிதிகள் ஓட்டுப்போட தகுதி பெற்றிருந்தனர். 
அவர்களில் 9 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்டோர் வாக்களித்தனர். 
வாக்குப் பதிவு முடிவடைந்தது டெல்லியில் உள்ள அகில இந்திய காங்கிரஸ் குழு தலைமையகத்துக்கு வாக்கு பெட்டிகள் நேற்று கொண்டு செல்லப்பட்டன. 
இந்தநிலையில், இன்று தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டன.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!