குப்பைகளை வீசுகின்றவர்களை புகைப்படம் எடுத்து மாநகரசபைக்கு அறிவிப்பவர்களிற்கு சன்மானம்

Kanimoli
3 years ago
 குப்பைகளை வீசுகின்றவர்களை புகைப்படம் எடுத்து  மாநகரசபைக்கு அறிவிப்பவர்களிற்கு சன்மானம்

யாழ். மாநகர எல்லைக்குள் வீதிகள் மற்றும் பொது இடங்களில் குப்பைகளை வீசுகின்றவர்களை புகைப்படம் மற்றும் ஒளிப்பதிவு எடுத்து ஆதாரத்துடன் மாநகரசபைக்கு அறிவிப்பவர்களிற்கு சன்மானம் வழங்கப்படவுள்ளது.

குறித்த குற்றத்திற்காக அறவிடப்படுகின்ற தண்டப்பணத்தில் பத்து வீத தொகையினை சன்மானமாக வழங்குவதென யாழ். மாநகர சபை தீர்மானித்துள்ளது.

அண்மையில் யாழ். மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் தலைமையில் நடைபெற்ற மாநகரசபைக் கூட்டத்திலேயே இந்தத் தீர்மானம் எட்டப்பட்டது.

மேலும், யாழ். மாநகரசபை எல்லைக்குட்பட்ட குடியிருப்பாளர்களின் வீடுகளுக்கு முன்னுள்ள வீதியோரத்தினை அவர்கள் தூய்மையாக பேண வேண்டும்.

வீதியோரங்கள் பற்றையாக உள்ளமையினால் அதற்குள் குப்பைகளை வீசிவிட்டுச் செல்கின்றார்கள். அதற்கு அவ்வீதியில் உள்ள மக்களே பொறுப்புக் கூற வேண்டும்.

அவ்வாறு தூய்மையாக பேணாவிடின் அவர்களிடமிருந்து 3000 ரூபாவை குற்றப்பணமாக அறவிடுவது எனவும் மாநகர முதல்வர் வி. மணிவிண்ணனால் முன்வைக்கப்பட்ட தீர்மானம் சபையால் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4