டிரோன் தாக்குதலை தொடர்ந்து ஈரானுடன் தூதரக உறவை துண்டிக்க உக்ரைன் திட்டம்

#Iran #Ukraine
Prasu
3 years ago
டிரோன் தாக்குதலை தொடர்ந்து ஈரானுடன் தூதரக உறவை துண்டிக்க உக்ரைன் திட்டம்

உக்ரைன் மீது ரஷியா தொடங்கிய போரில் தற்போது மீண்டும் தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளது. குறிப்பாக தலைநகர் கிவ்வில் சரமாரியாக ஏவுகணைகள் வீசப்பட்டன. 

இதற்கிடையே உக்ரைன் நகரங்கள் மீது டிரோன்கள் (ஆளில்லா விமானம்) மூலம் ரஷியா தாக்குதல் நடத்தி வருகிறது. 

இந்த டிரோன்கள், ஈரானில் தயாரிக்கப்பட்டதாகும். காமிகேஸ் என்று பெயரிடப்பட்ட ஈரான் டிரோன்கள் மூலம் உக்ரைனில் குடியிருப்பு பகுதிகள், மின் உற்பத்தி நிலையங்கள், குடிநீர் விநியோக நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தி வருவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. 

ஆனால் தங்கள் நாட்டில் தயாரிக்கப்பட்ட டிரோன்களை ரஷியாவுக்கு வழங்கவில்லை என்று ஈரான் மறுத்துள்ளது.

இந்த நிலையில் ஈரானுடனான தூதரக உறவை துண்டிக்க உக்ரைன் ஆலோசித்து வருகிறது. 

உக்ரைன் வெளியுறவு மந்திரி டிமிட்ரோ குலேபா கூறும்போது, "உக்ரைனில் தாக்குதலுக்கு பயன்படுத்தப்படும் டிரோன்கள் ஈரானில் தயாரிக்கப்பட்டது என்பதில் உறுதியாக இருக்கிறோம். 

இதற்கான ஆதாரங்களை பகிர்ந்து கொள்ள தயாராக இருக்கிறோம். உக்ரைனுடனான உறவுகளை அழித்ததற்கு ஈரான் முழு பொறுப்பையும் ஏற்க வேண்டும். 

ஈரானுடனான தூதரக உறவுகளை துண்டிக்கும் முன் மொழிவை உக்ரைன் அதிபரிடம் சமர்ப்பித்துள்ளேன். உக்னிரையர்களை கொல்ல ரஷியாவுக்கு உதவியதற்காக ஈரான் மீது பொருளாதார தடைகளை விதிக்க ஐரோப்பிய ஒன்றியத்தை வலியுறுத்துகிறோம்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4