ஏவுகணை சோதனையை அதிகப்படுத்தும் வடகொரியா - எதிர்ப்பு தெரிவிக்கும் தென் கொரியா

#NorthKorea #SouthKorea #Missile
Prasu
3 years ago
ஏவுகணை சோதனையை அதிகப்படுத்தும் வடகொரியா - எதிர்ப்பு தெரிவிக்கும் தென் கொரியா

அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகள் வலியுறுத்தியும் வடகொரியா விடாமல் தொடர்ந்து ஏவுகணை சோதனையை மேற்கொண்டு வருகின்றது. 

இதனை தொடர்ந்து ஏவுகணை சோதனையை அதிகப்படுத்தி வரும் வடகொரியா அதன் கிழக்கு மற்றும் மேற்கு கடற்கரைகளில் புதிய பீரங்கி தாக்குதல்களை நடத்தி இருக்கிறது. 

இந்த நிலையில் இதற்கு தென் கொரியா கடும் எதிர்ப்பு தெரிவித்து இருக்கின்ற நிலையில் வடகொரியாவின் இத்தகைய நடவடிக்கை 2018 உடன்படிக்கையை மீறும் செயல் என கூறியதாக தென் கொரிய செய்தி நிறுவனம் கூறியுள்ளது.

இதனை அடுத்து வடகொரியாவின் தொடர்ச்சியான ஆத்திரமூட்டல்கள் பெரிய தீபகற்பம் மற்றும் சர்வதேச சமூகத்தின் அமைதி மற்றும் ஸ்திரதன்மையை குறை மதிப்பிற்கு உட்படுத்தும் செயல்கள் என்று கூறியுள்ளது. 

மேலும் இந்த சம்பவம் பற்றி வடகொரிய அரசு ஊடகம் உடனடியாக செய்தி எதுவும் வெளியிடவில்லை.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4