ஆற்றுக்கு அருகில் விருந்துபசாரம்: நீரில் அடித்துச் செல்லப்பட்ட பிரபல பாடசாலைகளின் இரு மாணவர்கள்

Mayoorikka
2 years ago
ஆற்றுக்கு அருகில் விருந்துபசாரம்: நீரில் அடித்துச் செல்லப்பட்ட பிரபல பாடசாலைகளின் இரு மாணவர்கள்

கண்டியிலுள்ள பிரபல பாடசாலைகளின் உயர்தர மாணவர்கள் சிலர் ஒன்றிணைந்து, கட்டுகஸ்தோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வராதென்ன பகுதியில் மஹாவலி ஆற்றுக்கு அருகில் விருந்துபசாரம் ஒன்றை நடத்திக் கொண்டிருந்தபோது, மாணவர்கள் இருவர் நீரில் அடித்துச் செல்லப்பட்டனர்.

எனினும் இதன்​போது ஒரு மாணவர் ஆற்றில் இருந்த பாறை ஒன்றை இறுகப் பற்றிக்கொண்டதால் கடும் பிரயத்தனத்தின் பின்னர் மீட்கப்பட்ட நிலையில், மற்றைய மாணவர் காணாமல்போயுள்ளதாக கட்டுகஸ்தோட்டை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கண்டி- கிங்ஸ்வூட் கல்லூரி மாணவனே நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளதுடன், கன்னொருவ – ரணபிம பாடசாலையின் மாணவன் காப்பாற்றப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

காணாமல்போன மாணவனைத் தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!