யாழில் கள்ளு விற்பனை நிலையங்கள் எதிர்நோக்கும் பிரச்சனை தொடர்பில் மாவட்ட செயலகத்தில் ஆராய்வு!
கள்ளுவிற்பனை நிலையங்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை ஆராய்தல் தொடர்பான கலந்துரையாடல் யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் அவர்களின் தலைமையில் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
இக்கலந்துரையாடலில் கள்ளுவிற்பனை நிலையங்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை ஆராய்தலில் மதுவரித்திணைக்களத்தின் நடைமுறைகள் மற்றும் அனுமதிப்பத்திரம் பெற்றுக்கொள்ளல், வரிக்கட்டுப்பாடு, சங்கங்களின் கோரிக்கைகள், மூடிக்காணப்படும் கள் விற்பனை நிலையங்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள், ஜீவனோபாயம் பாதிக்கப்படல், கள் விற்பனை நிலையங்களால் சமூகத்தில் ஏற்படும் பாதிப்புக்கள், கள் விற்பனை நிலையங்களை நவீனப்படுத்தல், என்பன தொடர்பாக ஆராயப்பட்டன.
இக்கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர், உதவி மாவட்ட செயலாளர், பிரதேச செயலாளர்கள், மதுவரித்திணைக்கள உதவி ஆணையாளர், கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளர், அபிவிருத்தி உதவி ஆணையாளர், பனை அபிவிருத்தி சபை பொது முகாமையாளர், பனை தென்னை வள அபிவிருத்தி கூட்டுறவுச்சங்கள் சமாசத்தின் பிரதிநிதிகள், மற்றும் பனை தென்னை வள அபிவிருத்தி கூட்டுறவுச்சங்க பிரதிநிதிகள் ஆகியோரும் கலந்து கொண்டனர்.