அமெரிக்காவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை குறைக்க ஜோ பைடன் நடவடிக்கை

#America #Fuel #prices #Biden
Prasu
3 years ago
அமெரிக்காவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை குறைக்க ஜோ பைடன் நடவடிக்கை

அமெரிக்காவில் கடந்த மாத நிலவரப்படி நுகர்வோர் விலை பணவீக்கம் 8.2 சதவீதமாக உள்ளது. இதற்கு அங்கு பெட்ரோல், டீசல் உள்ளிட்ட வாகன எரிபொருட்கள் விலை உயர்வு முக்கிய பங்கு வகிக்கிறது. இதனால் சங்கிலித் தொடர்போல மற்ற விலைவாசிகளும் உயர்ந்துள்ளன.

இது மக்கள் மத்தியில் மிகுந்த அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இது அடுத்த மாதம் நடக்கிற நாடாளுமன்ற தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் எரிபொருட்கள் விலையை குறைப்பதற்காக கையிருப்பில் இருந்து கச்சா எண்ணெயை அதிகளவில் விடுவிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அதிரடி நடவடிக்கையில் இறங்கினார்.

இது தொடர்பாக அவர் நேற்று முன்தினம் ஆற்றிய உரையில் கூறியதாவது:- உக்ரைன் மீது ரஷிய அதிபர் புதின் படையெடுத்ததால்தான் எரிபொருட்கள் விலை உயர்ந்தன. இது சர்வதேச சந்தையை உலுக்கியது. எனவே எரிபொருட்கள் விலையைக் குறைக்க என்னால் இயன்ற அனைத்தையும் செய்து வருகிறேன்.

அந்த வகையில் எரிசக்தித்துறை அமெரிக்காவின் மூல உபாய கையிருப்பில் இருந்து டிசம்பர் மாதம் வரையில் மேலும் 1 கோடியே 50 லட்சம் பீப்பாய் எண்ணெயை விடுவிக்கும். கையிருப்பில் இருந்து கச்சா எண்ணெயை விடுவிக்கிறபோது, அது எரிபொருட்கள் விலை குறைப்பில் முக்கிய பங்கு வகிக்கும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

எனவே நாங்கள் தேசிய சொத்தான கச்சா எண்ணெய் கையிருப்பை தொடர்ந்து பொறுப்புடன் பயன்படுத்தப்போகிறோம்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4