வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள தாழமுக்கம் சூறாவளியாக வலுவடையும் சாத்தியம்

Mayoorikka
3 years ago
வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள தாழமுக்கம் சூறாவளியாக வலுவடையும் சாத்தியம்

வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள தாழமுக்க நிலை வலுவடைந்து உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த தாழமுக்க நிலையானது இன்றைய தினம் கடல் பிராந்தியங்களில் மேலும் வலுவடையும் சாத்தியம் உள்ளதாகவும் அத்திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தாழமுக்கமானது எதிர்வரும் 24 ஆம் திகதி சூறாவளியாக வலுவடையும் சாத்தியம் உள்ளதாகவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

இதேவேளை, 2022 அக்டோபர் 20 ஆம் திகதி அன்று வடக்கு அந்தமான் கடல் மற்றும் தெற்கு அந்தமான் கடல் மற்றும் தென்கிழக்கு வங்காள விரிகுடாவை ஒட்டியுள்ள பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் எனவும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருந்தது.

இது இன்று மேற்கு-வடமேற்கு நோக்கி நகர்ந்து அதே பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4