பாராளுமன்றத்தில் கலவரம் தொடர்பாக வழக்கு - டிரம்ப் வாக்குமூலம் அளிக்க நீதிமன்றம் உத்தரவு
அமெரிக்காவில் கடந்த அதிபர் தேர்தலில் ஜோபைடன் வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட டொனால்டு டிரம்ப் தோல்வி அடைந்தார்.
ஆனால் தேர்தலில் முறைகேடு நடந்துள்ளதாக கூறிய டிரம்ப் தனது தோல்வியை ஏற்க மறுத்தார். இதையடுத்து கடந்த ஆண்டு ஜனவரி மாதம் டிரம்ப் ஆதரவாளர்கள் அமெரிக்க பாராளுமன்றத்திற்குள் நுழைந்து கலவரத்தில் ஈடுபட்டனர்.
இதில் போலீஸ் அதிகாரி உள்பட 5 பேர் பலியானார்கள். கலவரத்தை தூண்டியதாக டிரம்ப் மீது புகார் கூறப்பட்டது.
இது தொடர்பாக விசாரணை குழு அமைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறது. மேலும் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த நிலையில் பாராளுமன்றத்தில் நடந்த கலவரம் தொடர்பாக டிரம்ப் வருகிற நவம்பர் 4-ந் தேதிக்குள் ஆவணங்களை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் 14-ந் தேதி நேரில் ஆஜராகி வாக்குமூலம் அளிக்க வேண்டும் என்றும் விசாரணை குழு உத்தரவிட்டுள்ளது.