இம்ரான்கான் தகுதி நீக்கம்- தேர்தல் ஆணைய தீர்ப்பை எதிர்த்து வழக்கு தொடர கட்சி தீர்மானம்

Prasu
2 years ago
இம்ரான்கான் தகுதி நீக்கம்- தேர்தல் ஆணைய தீர்ப்பை எதிர்த்து வழக்கு தொடர கட்சி தீர்மானம்

பாகிஸ்தான் பிரதமராக பதவி வகித்த வந்த அந்நாட்டு கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சி (பி.டி.ஐ.) தலைவருமான இம்ரான்கான், பாராளுமன்றத்தில் கொண்டு வரப்பட்ட நம்பிக்கை இல்லா தீர்மானத்தை அடுத்து பதவி விலகினார். 

இந்நிலையில் தமது பதவிக்காலத்தின் போது வெளிநாடுகளின் தலைவர்கள் மற்றும் வெளிநாட்டு பிரமுகர்களிடம் இருந்து பெறப்பட்ட அரசு பரிசுப் பொருட்களை சட்ட விரோதமாக விற்றதாகவும் அவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது. 

அரசு கஜானாவிற்கு செல்ல வேண்டிய வைர நகைகள், விலையுயர்ந்த கடிகாரங்கள் உள்ளிட்ட பரிசுப் பொருட்களில், மூன்று பரிசுப் பொருட்களை இம்ரான்கான் விற்பனை செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. 

இதன் மொத்த மதிப்பு ரூ.58 மில்லியன் என கூறப்படுகிறது. இது தொடர்பாக அரசுத் துறையான தோஷாகானா தொடர்ந்து வழக்கை விசாரித்த பாகிஸ்தான் தேர்தல் ஆணையம், இம்ரான்கான் தேசிய சட்டமன்ற உறுப்பினராக நீடிக்க ஐந்து ஆண்டுகள் தடை விதித்து தீர்ப்பளித்துள்ளது. 

மேலும் அவர் பொது பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்தும் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பை எதிர்த்து இஸ்லாமாபாத் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப் போவதாக பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சி அறிவித்துள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!