இந்திய மக்களுக்கு தீபாவளி வாழ்த்து தெரிவித்த இஸ்ரேல் ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக்
Prasu
2 years ago
தீபாவளிப் பண்டிகை நாளை வெகு விமர்சையாக உலகெங்கும் கொண்டாடப்பட உள்ளது. தீபாவளியை முன்னிட்டு பல்வேறு நாடுகளின் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், இஸ்ரேல் அதிபர் ஐசக் ஹெர்சாக் இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்மு மற்றும் இந்திய நண்பர்களுக்கு தீபாவளி வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
இதுதொடர்பாக ஹெர்சாக் வெளியிட்டுள்ள டுவிட்டர் வாழ்த்துச் செய்தி: தீபாவளி என்பது தீமையின் மீது நன்மையையும், இருளின் மீது ஒளியையும், அறியாமையின் மீது அறிவையும் வென்றெடுக்கும் பண்டிகையாகும்.
ஜனாதிபதி முர்மு மற்றும் எங்கள் அன்பான இந்திய நண்பர்களுக்கு, இஸ்ரேல் மக்கள் சார்பாக உங்கள் அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள் என பதிவிட்டுள்ளார்.
மேலும், இந்தியாவுக்கான இஸ்ரேல் தூதர் நவர் கிலோனும் இந்தியர்களுக்கு தீபாவளி வாழ்த்துகளைத் தெரிவிதுள்ளார்.