மீண்டும் ஜனாதிபதியாக தேர்வான சீன ஜனாதிபதிக்கு வாழ்த்து தெரிவித்த புதின்
#China
#Russia
#President
Prasu
2 years ago
சீன கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவராக மூன்றாவது முறையாக தேர்வானதை அடுத்து ஜின்பிங் மீண்டும் சீன அதிபராக பதவியேற்கிறார்.
இதையடுத்து, ரஷிய அதிபர் விளாடிமிர் புதின், ஜி ஜின்பிங்கிற்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவிற்கும் சீனாவிற்கும் இடையில் ஒரு விரிவான கூட்டாண்மையை தொடர்ந்து உருவாக்க ஆவலுடன் இருப்பதாக புதின், ஜின்பிங்கிடம் கூறியுள்ளதாக ரஷிய அதிபர் மாளிகையான கிரெம்லின் தெரிவித்துள்ளது.
மேலும், ஜின்பிங் செழிப்பாகவும், புதிய வெற்றிகளை பெற விரும்புகிறேன். நமது நாடுகளுக்கிடையேயான மூலோபாய ஒத்துழைப்பை வலுப்படுத்தும் நோக்கில் எங்கள் ஆக்கபூர்வமான உரையாடல் மற்றும் நெருக்கமான, பொதுவான பணிகளைத் தொடர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்" என்று புதின் தெரிவித்துள்ளார்.