20 வருடங்கள் முடிவடைந்ததை சிறப்பிக்கும் விதமாக வெளிவந்த ஹாரிபாட்டர் உருவம் பொறிக்கப்பட்ட நாணயங்கள்
Prasu
2 years ago
இங்கிலாந்து நாட்டில் ராயல் மின்ட் என்னும் நிறுவனம் நாணயங்கள் தயாரிக்க மற்றும் அச்சிட அரசாங்கத்தின் அங்கீகாரம் பெற்று இயங்கிக் கொண்டிருக்கிறது. 1997 ஆம் வருடத்தில் வெளியான தொடர் 25 வருடங்களை பூர்த்தி செய்திருக்கிறது. அந்த வகையில் ராயல் மின்ட் நிறுவனமானது, ஹாரி பாட்டரின் உருவம் பொறிக்கப்பட்ட நாணயங்களை வெளியிட்டிருக்கிறது.
இது பற்றி அந்நிறுவனம் தெரிவித்ததாவது, இந்த நாணயங்களில் ஹாரி பாட்டரின் முகம் மட்டுமில்லாமல் மறைந்த மகாராணியார் இரண்டாம் எலிசபெத் மற்றும் தற்போதைய மன்னர் சார்லஸ் போன்றோரின் படங்களும் இடம்பெற்று இருக்கிறது. மேலும் நாணயங்களில் இருக்கும் வடிவமைப்பு துல்லியமாக இருக்க வேண்டும் என்பதற்காக சிறப்பு லேசர்கள் உபயோகப்படுத்தப்பட்டு இருக்கிறது.