இன்றைய வேத வசனம் 25.10.2022: அவருடைய சித்தத்தை அறிகிற அறிவினாலே நிரப்பப் படவும்

Prathees
2 years ago
இன்றைய வேத வசனம்  25.10.2022: அவருடைய சித்தத்தை அறிகிற அறிவினாலே நிரப்பப் படவும்

பிதாவாகிய தேவனுக்கு பிரியமுண்டாக நடக்கும் தேவபிள்ளைகள் தேவனை அறிகிற அறிவிலே விருத்தியடைகிறவர்களாய் இருக்கின்றார்கள்.

இப்படியாக கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தின் மேல் விசுவாசம் கொண்டு, அவருடைய இரத்தத்தினாலே கழுவப்பட்டவர்கள் தேவ சித்தத்தை செய்வதற்கு தான் அழைக்கப்பட்டதை அறிந்து, பரிசுத்தாவியின் வழி நடத்தலோடு எல்லாவற்றிலும் பிதாவாகிய தேவனுடைய சித்தத்தை நிறைவேற்றுகிறார்கள்.

இப்படியாக தேவ சித்தத்தை நிறைவேற்றுபவர்கள் கர்த்தருக்குள் மன மகிழ்ச்சியும், சந்தோஷமும் உடையவனாகி, நீடிய சாந்தம், பொறுமையோடு, தனக்குள் இருக்கும் தேவ அன்பை வெளிப்படுத்துகிறார்கள்.

தேவனது அன்பு தன் இதயத்தில் இருப்பதால் தேவ பிள்ளையானவர்கள் தேவ சித்தத்தை நிறைவேற்றுகிறவர்களாகயிருக்கிறார்கள். 

பிதாவாகிய தேவனின் சித்தம் பரலோகத்தில் செய்யப்படுவது போல பூலோகத்திலும் செய்யப்படுவதாக என்று நமது அன்பின் ஆண்டவர் நமக்கு கற்பித்த பிரகாரம், நம்மைக் கொண்டு பிதாவாகிய தேவன் தமது மேன்மையான பரிசுத்த சித்தத்தை பூமியிலே செய்கிறவராயிருக்கிறார்.

சத்திய வசனமாகிய சுவிசேஷமானது, நம்மை தேவ சித்தத்தை அறிகிற அறிவிலே அனுதினமும் நிரப்பி பரிசுத்தாவியின் வல்லமையோடும் பெலத்தோடும் தேவ சித்தத்தை செய்ய நம்மை தகுதியுள்ளதாக்கிறதாயிருக்கின்றது. 

நம்முடைய பிதாவாகிய தேவனின் சந்தோஷத்திற்குள் நாம் பிரவேசிக்கும்படி, தேவன் நம்மை இந்தப் பூமியில் தமது பிள்ளைகளாக தெரிந்து கொண்டு அழைத்திருக்கின்றார்.

ஆகையால் அவர் தந்திருக்கிற எல்லாவித ஆசீர்வாதங்களாலும், தாலந்துகளாலும் நன்மைகளாலும் ஞானத்தோடும் விவேகத்தோடும் அவருடைய சித்தத்தை நிறைவேற்றுவோமாக. இதற்கென்றே நாம் அழைக்கப்பட்டிருக்கிறோம். ஆமென்!!!

நீங்கள் எல்லா ஞானத்தோடும், ஆவிக்குரிய விவேகத்தோடும் அவருடைய சித்தத்தை அறிகிற அறிவினாலே நிரப்பப் படவும், (நாளாகமம் 16:29)

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!