அமெரிக்க பாடசாலையில் துப்பாக்கி சூடு! துப்பாக்கிதாரியின் நோக்கம் என்ன?
அமெரிக்க பாடசாலையில் துப்பாக்கி சூடு! துப்பாக்கிதாரியின் நோக்கம் என்ன?
அமெரிக்க மிசோரியில் அமைந்துள்ள உயர்நிலை பாடசாலையில் இடம்பெற்ற துப்பாக்கி தாக்குதலில் துப்பாக்கிதாரி உட்பட குறைந்தது மூன்று பேர் மரணமாகினர். அத்துடன் ஏழு பேர் காயமடைந்தனர்.
துப்பாக்கிதாரி திங்களன்று உள்ளூர் நேரப்படி முற்பகல் 9:00 மணியளவில் பாடசாலைக்குள் பிரவேசித்துள்ளார்.
பாடசாலைக் கட்டிடத்தின் கதவுகள் பூட்டப்பட்டிருந்த நிலையில், அவர் எப்படி உள்ளே நுழைந்தார் என்பது உடனடியாகத் தெரியவில்லை.
துப்பாக்கிதாரியின் ஆயுதம் இடையில் செயற்படாமை காரணமாகவே உயிர்கள் காப்பாற்றப்பட்டதாக சாட்சிகள் கூறுகின்றனர்.
துப்பாக்கிதாரி 19 வயதுடைய முன்னாள் மாணவர் என காவல்துறையினர் அடையாளம் கண்டுள்ளனர்.
எனினும் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் அவர் பலியானார்.
சுமார் 400 மாணவர்களைக் கொண்ட இந்த பாடசாலையில் அவர் நடத்திய தாக்குதலுக்கான நோக்கம் தெளிவாக தெரிய வரவில்லை.
சம்பவத்தின்போது யுவதி ஒருவர் பாடசாலைக்குள் மரணமானார். மற்றும் ஒருவர் பெண் மருத்துவமனையில் மரணமானதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
ஒரு டீனேஜ் பெண் பள்ளிக்குள் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது, ஒரு பெண் மருத்துவமனையில் இறந்தார் என்று போலீசார் உள்ளூர் ஊடகங்களுக்கு தெரிவித்தனர்.
காயமடைந்த ஏழு பேரில் மூன்று பெண்கள் மற்றும் நான்கு சிறுவர்கள் உள்ளடங்குகின்றனர்.
எனினும் அனைவருக்கும் உயிருக்கு ஆபத்தான காயங்கள் இல்லை என்று உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன