இங்கிலாந்து உள்துறை மந்திரியாக சுவெல்லா பிரேவர்மென் மீண்டும் நியமனம்

Prasu
2 years ago
இங்கிலாந்து உள்துறை மந்திரியாக சுவெல்லா பிரேவர்மென் மீண்டும் நியமனம்

இங்கிலாந்தின் புதிய பிரதமராக பொறுப்பேற்ற சில மணி நேரங்கள் ரிஷி சுனக் அதிரடி நடவடிக்கைகளை ஆரம்பித்தார். முன்னாள் பிரதமர் லிஸ் டிரஸ்ஸின் மந்திரி சபையில் பதவியில் இருந்த பலரை ராஜினாமா செய்யுமாறு புதிய பிரதமர் ரிஷி சுனக் கேட்டுள்ளார். 

இங்கிலாந்து துணைப் பிரதமர் மற்றும் நீதித்துறை செயலாளராக டொமினிக் ராப் நியமிக்கப்பட்டுள்ளார்.டொமினிக் ராப் முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன் மந்திரி சபையில் துணைப் பிரதமர் பதவியில் இருந்தவர். 

அதன்படி, வணிக செயலாளர் ஜேக்கப் ரீஸ்-மோக், நீதித்துறை செயலாளர் பிராண்டன் லூயிஸ், வேலை மற்றும் ஓய்வூதிய செயலாளர் க்ளோ ஸ்மித் மற்றும் மேம்பாட்டு அமைச்சர் விக்கி போர்ட் ஆகியோர் ராஜினாமா செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளனர். 

அலோக் சர்மா மந்திரி பதவியிலிருந்து நீக்கப்பட்டார். இங்கிலாந்தின் நிதி மந்திரியாக ஜெர்மி ஹன்ட் நீடிக்கிறார். நாதிம் ஜஹாவிக்கு புதிதாக மந்திரி சபையில் பதவி அளிக்கப்பட்டுள்ளது. 

ஆனால் அவருக்கான துறை ஒதுக்கப்படவில்லை. பென் வாலஸ் மீண்டும் வெளியுறவுத்துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். 

ஜேம்ஸ் கிளெவர் வெளியுறவு, காமன்வெல்த் மற்றும் மேம்பாட்டு விவகாரங்களுக்கான செயலாளராக மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். 

பாராளுமன்ற கருவூலத்தின் செயலாளராக சைமன் ஹார்ட் நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், சமீபத்தில் பதவி விலகிய இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுவெல்லா பிரேவர்மெனை உள்துறை மந்திரியாக மீண்டும் நியமனம் செய்து ரிஷி சுனக் உத்தரவிட்டுள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!