மன்னர் சார்லஸின் மெழுகு சிலை மீது கேக் பூசிய சமூக ஆர்வலர்கள்

Prasu
2 years ago
மன்னர் சார்லஸின் மெழுகு சிலை மீது கேக் பூசிய சமூக ஆர்வலர்கள்

இங்கிலாந்தின் லண்டனில் மெழுகு சிலைகள் வைக்கப்பட்டிருக்கும் அருங்காட்சியகமான  மேடம் டுசாட்ஸில் வைக்கப்பட்டிருந்த மன்னர் சார்லஸ் மற்றும் ராணி கமீலாவின் சிலைகளை நோக்கி ஒரு பெண்ணும், ஒரு நபரும் வந்திருக்கிறார்கள். அவர்கள், திடீரென்று சட்டையை கழற்றினார்கள. அதனுள் அவர்கள் அணிந்திருந்த டி-சர்ட்டில் “ஜஸ்ட் ஸ்டாப் ஆயில்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

மேலும், அவர்கள் இருவரும் தாங்கள் வைத்திருந்த சாக்லேட் கேக்கை மன்னர் மெழுகு சிலையின் மீது பூசினார்கள். இதனையடுத்து, இந்த சம்பவம் தொடர்பில் நான்கு பேர் கைதாகியுள்ளனர்.

அதாவது, எண்ணெய், எரிவாயுவிற்கான புது உரிமங்கள் அனைத்தையும் ரத்தாக்க வேண்டும் என்று இங்கிலாந்து அரசாங்கத்திற்கு கோரிக்கை வைக்கப்பட்டிருக்கிறது. கைதானவர்கள் பருவகால செயல்பாட்டாளர்கள் என்றும் தங்களின் கோரிக்கைக்கு தகுந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் வரை இந்த போராட்டம் நடக்கும் என்று அவர்கள் எச்சரித்ததாகவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!