அமெரிக்காவின் நியூயோர்க்கில் நடத்தப்பட்ட மிஸ் அழகிப்போட்டியின் போது ஏற்பட்ட மோதல் சம்பவம் பரபரப்பு

Kanimoli
2 years ago
அமெரிக்காவின் நியூயோர்க்கில் நடத்தப்பட்ட மிஸ் அழகிப்போட்டியின் போது ஏற்பட்ட மோதல் சம்பவம் பரபரப்பு

அமெரிக்காவின் நியூயோர்க்கில் நடத்தப்பட்ட மிஸ் அழகிப்போட்டியின் போது ஏற்பட்ட மோதல் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

மிஸ் ஸ்ரீலங்கா நியூயோர்க் அழகியாக ஏஞ்சலியா குணசேகர தெரிவு செய்யப்பட்டார். போட்டியின் பின்னர் இருத்தரப்புக்கு இடையில் கடும் மோதல் ஏற்பட்டுள்ளது.

நியூயோர்க்கில் உள்ள சவுத் பீச் வாண்டர்பில்ட்டில் நடைபெற்ற “மிஸ் ஸ்ரீலங்கா நியூயோர்க்” போட்டியின் இந்த மோதல் இடம்பெற்றது.

போட்டியில் கலந்து கொண்ட போட்டியாளரின் முன்னாள் காதலனுக்கும் சமகால காதலனுக்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதம் மோதலாக மாறியுள்ளது.

இதன் காரணமாக நிகழ்ச்சி நடந்த மண்டபத்தின் வரவேற்பு பகுதி பலத்த சேதமடைந்தது. நியூயோர்க்கில் உள்ள ஸ்டேட்டன் தீவு மற்றும் குயின்ஸ் ஆகிய பகுதிகளில் வசிக்கும் இலங்கையர்களின் இரு தரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

மோதல் சம்பவத்தை அடுத்து அந்தப் பகுதியிலுள்ள நட்சத்திர ஹோட்டல்களில் எந்தவொரு நிகழ்வினையும் இலங்கையர்கள் நடத்த அனுமதிக்கப் போவதில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆண்கள், பெண்கள் என கும்பலாக இடம்பெற்ற மோதல் காரணமாக 50இற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

மண்டபத்தில் இருந்த பாதுகாப்புப் பணியாளர்கள் மோதலில் ஈடுபட்ட அனைவரையும் அங்கிருந்து அகற்றியுள்ள நிலையில், சிலர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!