இன்றைய வேத வசனம் 27.10.2022: பாலிய ஸ்திரீகளை எல்லாக் கற்புடன் சகோதரிகளைப்போலவும் பாவித்துஇ புத்திசொல்லு.
ஸ்திரீகளைத் தாய்களைப்போலவும், பாலிய ஸ்திரீகளை எல்லாக் கற்புடன் சகோதரிகளைப்போலவும் பாவித்து, புத்திசொல்லு.
1 தீமோத்தேயு 5:1-2
அலுவலக தலைமைப்பொறுப்பில் இருப்பவர் அவளைத் தனியே சந்தித்துப் பேச வேண்டும் என்று கேட்டதால், சிவந்த கண்களுடனும் கண்களில் நீர் சொறிய, கொண்டாட்ட மையத்தின் ஆலோசனை அறையில் கேரனை சந்தித்தேன்.
42 வயது நிரம்பிய கேரன், திருமணம் செய்துகொள்ள விரும்பினாள். அவளுடைய அலுவலகத்தின் தலைவரும் அவளைத் திருமணம் செய்துகொள்ள விரும்பினான். ஆனால் அவனுக்கு ஏற்கனவே திருமணமாகி, மனைவி இருக்கிறாள்.
அவளை மனரீதியாய் காயப்படுத்திய அவளுடைய சகோதரன், அன்பு காட்டத் தவறிய தகப்பன் என்ற ஆண்களின் மீதான ஒரு வெறுப்புணர்வோடே கேரன் வளர்ந்தாள்.
புதுப்பிக்கப்பட்ட அவளுடைய விசுவாசமானது, வாழ்க்கையின் புதிய எல்லைகளை அவளுக்கு ஏற்படுத்திக் கொடுத்தது. ஆனாலும் அவளுடைய ஏக்கம் தொடர்ந்தது. இந்த வகையான அன்பை அவளுடைய வாழ்க்கையில் ருசிக்காதது அவளுக்கு வேதனையாகவே தோன்றியது.
நாங்கள் பேசி முடிந்த பின்பு, நானும் கேரனும் தலைகளைத் தாழ்த்தி, ஜெபித்தோம். வல்லமையான ஜெபத்தின் மூலம், கேரன் தன்னுடைய சோதனைகளையும், அந்த நபரின் வற்புறுத்தல்களையும் தேவனுடைய சமூகத்தில் வைத்துவிட்டு, பாரம் குறைந்தவளாய் அந்த அறையைவிட்டுக் கடந்துசென்றாள்.
அந்த நாளில் தாமே, எல்லோரையும் சகோதரர்களாகவும் சகோதரிகளாகவும் பாவிக்கத்தூண்டும் பவுலின் போதனைகளை உணர்ந்தேன் (1 தீமோத்தேயு 5:1-2). நம்முடைய பார்வையையும் பேச்சையும் வைத்து அனைத்தையும் இச்சையாய் மாற்றக்கூடிய வலிமை படைத்த இந்த உலகத்தில், எதிர் பாலினத்தவரை நம் குடும்ப நபராய் கருதுவதே ஆரோக்கியமானது. ஒரு ஆரோக்கியமான சகோதர-சகோதரி சிநேகத்திற்குள் தவறு நேரிட வாய்ப்பில்லை.
அவளை தவறாய் நடத்திய, எண்ணிய, புறக்கணித்த நபர்களையே பார்த்து வளர்ந்த கேரனுக்கு, சகோதர-சகோதரி சிநேகத்திற்கு உட்பட்ட ஒருவரின் பேச்சு தேவை. நம்முடைய சுவிசேஷத்தின் மேன்மை அதுவே. நமக்கு புதிய சொந்தங்களைக் கொடுத்து வாழ்க்கையின் பிரச்சனைகளை மேற்கொள்ள உதவுகிறது.