இலங்கைக்கு 100 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியை வழங்கவுள்ள ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி
Prasu
2 years ago
ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி,இலங்கைக்கு 100 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியை வழங்கவுள்ளதுஅத்துடன் கடுமையான கடன் பிரச்சினைகளை எதிர்கொள்ளும் நாடுகளுக்கு ஆதரவளிப்பதாகவும் வங்கி உறுதியளித்துள்ளது.
கூடுதலாக, நாட்டின் பேரழிவுகரமான வெள்ளத்தைத் தொடர்ந்து எதிர்வரும் தமது உச்சிமாநாட்டின்போது பாகிஸ்தானுக்கு ஒரு பெரிய நிதித் தொகுப்பை, அந்த வங்கி அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பீய்ஜிங்கைத் தலைமையிடமாகக் கொண்ட வங்கியின் வருடாந்த உள்கட்டமைப்பு நிதி அறிக்கை, வெளியிடப்பட்டது.
இந்த அறிக்கையிலேயே இலங்கை மற்றும் பாகிஸ்தானுக்கான உதவி குறித்து வங்கி அறிவித்துள்ளது