தாயார் அண்மையில் உயிரிழந்த நிலையில் தாயாரின் பிரிவை ஏற்றுக் கொள்ளமுடியாமல் மகனும் உயிரிழப்பு
Kanimoli
2 years ago
தாயார் அண்மையில் உயிரிழந்த நிலையில் தாயாரின் பிரிவை ஏற்றுக் கொள்ளமுடியாமல் மகனும் உயிரிழந்து சோகத்தை ஏற்படுத்திய சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது.
இச் சமபவம் வடமராட்சி கொற்றாவத்தை பகுதியில் இடம் பெற்றுள்ளது.
அத்தோடு இவர் தாயாரின் பிரிவால் அடிக்கடி மனவேதனையில் இருந்து வந்துள்ளமை தெரியவந்துள்ளது.
மன்னார் மாவட்டத்தில் அரச தொழில் புரிந்து வரும் 31 வயதுடைய சீனித்தம்பி சுதர்சன் என்ற அரச உத்தியோத்தரே இவ்வாறு நேற்றைய தினம் வீட்டில் உயிரிழந்துள்ளார்.
சடலம் உடல் கூற்று சோதனைக்காக பருத்தித்துறை ஆதார வைத்திய சாலையில் வைக்கப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணைகளை வல்வெட்டித்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.