எந்த நேரத்திலும் தேர்தலை எதிர்கொள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தயார் - மஹிந்த ராஜபக்ஷ
Kanimoli
2 years ago
எந்த நேரத்திலும் தேர்தலை எதிர்கொள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தயாராக இருப்பதாக கட்சியின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஆனமடுவ பிரதேச சபைக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
“மக்களைத் தூண்டிவிட முயல்பவர்களிடம் நாட்டைப் பொறுப்பேற்க சொன்னால், வேண்டாம் என்கிறார்கள். ஒரு கதை உண்டு.. பைத்தியக்காரர்கள் குழப்பமடைந்தாலும் மருத்துவர்கள் குழப்பமடைய மாட்டார்கள்.
நமது கட்சி நாட்டை பின் நோக்கி இழுக்கும் கட்சியல்ல. தீ வைப்பது இலகு ஆனால் அதை அணைப்பது கடினம். தேர்தல் வந்தாலும், எந்த நேரத்திலும் நாங்கள் தயாராக இருக்கிறோம்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.