யாழ். இளவாலை சேந்தாங்குளம் கடலில் ஆணின் சடலம் மீட்பு!
Mayoorikka
2 years ago
சேந்தாங்குளம் கடலில் ஆணின் சடலம் கண்டுபிடிப்பு
இன்று காலை, இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சேந்தாங்குளம் கடலில் மிதந்தபடியே ஆண் ஒருவரது சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மீனவர்கள் கடற்றொழிலுக்கு சென்றவேளை குறித்த சடலம் இருப்பது அவதானிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து இளவாலை பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது.
குறித்த சடலம் யாருடையது என இதுவரை இனங்காணப்படவில்லை.
இளவாலை பொலிஸார் குறித்த சடலத்தினை இனங்காண்பதற்கான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.