வட மாகாண ஆளுநரின் வழிநடத்தலின் உருவாக்கப்பட்ட சித்த விசேட சிகிச்சை பிரிவும் மருந்து விற்பனை நிலையமும் திறந்து வைப்பு

Mayoorikka
2 years ago
வட மாகாண ஆளுநரின் வழிநடத்தலின் உருவாக்கப்பட்ட சித்த விசேட சிகிச்சை பிரிவும் மருந்து விற்பனை நிலையமும் திறந்து வைப்பு

வடக்கு மாகாண ஆளுநர் அவர்களின் வழிநடத்தலின் உருவாக்கப்பட்ட சித்த விசேட சிகிச்சை கட்டண பிரிவும் மருந்து விற்பனை நிலையமும் இன்றைய தினம் திறந்து வைக்கப்பட்டது.

இந்த நிகழ்வு அச்சு வேலி செல்வநாயகபுரம் பகுதியில் அமைந்துள்ள மாவட்ட சித்த வைத்திய சாலையில் இடம் பெற்றது.

பிரதம விருந்தினராக கலந்து கொண்ட வடமாகாண பிரதம செயலாளர் எஸ். எம். சமன் பந்துலசேன கலந்து கொண்டிருந்தார்.

பிரதம விருந்தினர்களாக மாகாண ஆணையாளர் மாகாண நன்னடத்தை சிறுவர் பராமரிப்பு சேவைகள் நிலையத்தின் திரு ஆர் குருபரன், சான்று பெற்ற பாடசாலையின் அதிபர் எஸ் புவனேந்திரன், அச்சுவேலி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பொலீஸ் பரிசோதகர் பிரபாத் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

இந்த சிகிச்சை நிலையத்தில் நோயாளர்கள் கட்டணம் செலுத்தி தங்களுடைய சேவைகளை பெற்றுக் கொள்ள முடியும் என்பதுடன் ஆயுர்வேத மருந்துகளையும் வாங்கிச் செல்ல முடியும்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!