முல்லைத்தீவு - முள்ளியவளை, தண்ணீரூற்று பகுதியில் போதை மாத்திரையுடன் இளைஞன் ஒருவர் கைது

Kanimoli
2 years ago
முல்லைத்தீவு - முள்ளியவளை, தண்ணீரூற்று பகுதியில் போதை மாத்திரையுடன் இளைஞன் ஒருவர் கைது

முல்லைத்தீவு - முள்ளியவளை, தண்ணீரூற்று பகுதியில் போதை மாத்திரையுடன் இளைஞன் ஒருவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

நேற்று முன்தினம் (26.10.2022) மாவட்ட பெருங்குற்றத்தடுப்பு விசாரணைப்பிரிவினர் மேற்கொண்ட  நடவடிக்கையின் போது இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

வடக்கில் இளைய சமூகத்தினரிடையே அதிகரித்துச் செல்லும் போதைப்பொருள் பாவனைகளை கட்டுப்படுத்த பல வழிகளில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ள போதிலும் தற்போது இளைஞர்கள் மத்தியில் போதை மாத்திரையின் பாவனை அதிகரித்து காணப்படுகின்றது.

880 மில்லிகிராம் போதை மாத்திரையுடன் தண்ணீரூற்று பகுதியினை சேர்ந்த இளைஞனை கைது செய்த பொலிஸார் போதை மாத்திரை எங்கிருந்து, எவ்வாறு கிடைக்கப்பெற்றது என்ற கோணத்தில் விசாரணைகளை முன்னெடுத்து வருவதுடன் கைது செய்யப்பட்ட இளைஞனை சட்டநடவடிக்கைக்கு உட்படுத்தும் நடவடிக்கையிலும் ஈடுபட்டுள்ளார்கள்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!