சந்தேக நபர்கள் சிறையில் இருக்கும் அவலத்தைப் பார்த்து மன உளைச்சலால் சேவையை விட்டு விலகிய பொலிஸ் கான்ஸ்டபிள்

Prathees
2 years ago
சந்தேக நபர்கள் சிறையில் இருக்கும் அவலத்தைப் பார்த்து மன உளைச்சலால் சேவையை விட்டு விலகிய பொலிஸ் கான்ஸ்டபிள்

சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டவர்கள் தடுத்து வைக்கப்பட்டிருப்பதைக் கண்டு தாங்க முடியாத சோகத்தை உணர்ந்ததாக ரம்புக்கனைப் பொலிஸின் பயிலுனர் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் வாக்குமூலம் அளித்து நேற்று (26) சேவையிலிருந்து வெளியேறியதாக அப்பகுதியின் உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இந்தப் பயிற்சி பெற்ற பொலிஸ் கான்ஸ்டபிள் சீருடை பொலிஸ் உத்தியோகபூர்வ அடையாள அட்டை மற்றும் அவருக்கு பொலிஸ் திணைக்களத்தினால் வழங்கப்பட்ட அனைத்து உடமைகளையும் ஒப்படைj;J   அவர் சேவையை விட்டுச் சென்றதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மஹியங்கனை பொலிஸ் பயிற்சிக் கல்லூரியில் பயிற்சியின் பின்னர் இந்த பயிலுனர் பொலிஸ் கான்ஸ்டபிள்  ரம்புக்கனை பொலிஸ் கடமைகளுக்கு நியமிக்கப்பட்டார்.

கேகாலை பிரிவுக்குட்பட்ட பொலிஸ் நிலையத்திற்குச் சென்ற போது, ​​பொலிஸ் அறையில் சந்தேகநபர்கள் குழுவொன்று தடுத்து வைக்கப்பட்டிருந்ததைக் கண்டு மிகவும் வருத்தமடைந்ததாக, பயிற்சி கான்ஸ்டபிள், சேவையிலிருந்து வெளியேறும் முன் வாக்குமூலம் அளித்ததாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சந்தேகநபர்கள் பொலிஸ் அறையில் அடைக்கப்பட்டுள்ள ஞாபகம் இருந்ததால் தான் இரவில் தூங்கவில்லை எனவும் இதனால் ஏற்பட்ட மன உளைச்சல் தாங்க முடியாமல் தான் இரவில் தூங்கவில்லை எனவும்  கான்ஸ்டபிள் தெரிவித்ததாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி தெரிவித்தார்.

பொலிஸ் சேவையில் இருந்து விலகுவதற்கு வழிவகுத்த இந்த உண்மைகள் குறித்து வாக்குமூலம் அளித்ததையடுத்து பயிற்சி கான்ஸ்டபிள் சேவையை விட்டு வெளியேறியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!