13 ஆயிரம் டொன் யூரியாவின் ஒரு பகுதி விவசாய அமைச்சிடம் கையளிப்பு
உலக வங்கியின் 110 மில்லியன் அமெரிக்க டொலர் துரிதக்கடன் திட்டத்தின் கீழ் 13 ஆயிரம் டொன் யூரியாவின் ஒரு பகுதி இன்று (28) விவசாய அமைச்சிடம் கையளிக்கப்பட்டது.
இதனடிப்படையில் நெற் பயிர்ச்செய்கையில் ஈடுபடும் விவசாயிகளுக்கு 50 கிலோ கிராம் நிறையுடைய யூரியா மூடையை 10 ஆயிரம் ரூபாவுக்கு வழங்க அரசு தீர்மானித்துள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலையீட்டில் முன்னெடுக்கப்பட்ட கலந்துரையாடல்களின்போது முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளுக்கமையவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்தார்.
ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் சர்வதேச அபிவிருத்தியை நோக்காகக் கொண்ட ஐக்கிய நாடுகள் சபையின் முகவர் அமைப்புக்கள் பலவற்றின் நன்கொடைகளுக்கு மேலதிகமாகவே உலக வங்கியிடமிருந்து இந்தக் கடன் கிடைத்துள்ளது.
மேலும், சோளம் பயிரிடும் விவசாயிகளுக்கு 60 ஆயிரம் ஹெக்டெயார்களுக்கு அவசியமான 12 ஆயிரம் மெட்ரிக் டொன் யூரியா வழங்கப்படவுள்ளது.
இதற்காக வழங்கப்படும் 50 கிலோ யூரியாவின் விலை 15 ஆயிரம் ரூபாவாகும்.