தேசிய உயிரியல் பூங்காக்களில் முறைகேடுகளைத் தடுக்க புதிய முறை

Prathees
2 years ago
தேசிய உயிரியல் பூங்காக்களில் முறைகேடுகளைத் தடுக்க புதிய முறை

தேசிய உயிரியல் பூங்காக்களுக்கான டிக்கெட்டுகளை டிஜிட்டல் முறையின் கீழ் வழங்குவதில் வனவிலங்கு மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு அமைச்சகம் கவனம் செலுத்தியுள்ளது.

அதன் பிரகாரம் இணையவழி முறையிலும் QR முறையிலும் பயணச்சீட்டுகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சின் செயலாளர் சந்திரா ஹேரத் தெரிவித்துள்ளார்.

பூங்காக்களில் முறைகேடுகளை தடுக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் செயலாளர் குறிப்பிட்டார்.

இதன்படி, நிதி அமைச்சின் தகவல் தொழில்நுட்பப் பிரிவு இது தொடர்பான நடவடிக்கைகளை ஏற்கனவே ஆரம்பித்துள்ளது.

புதிய முறையின் கீழ் தேசிய உயிரியல் பூங்காக்களுக்கான நுழைவுச் சீட்டுகளை மூன்று மாதங்களுக்குள் வழங்க எதிர்பார்க்கப்படுவதாக வனவிலங்கு மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் சந்திர ஹேரத் மேலும் தெரிவித்தார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!