வாராந்த ஏலத்தில் இலங்கையின் சராசரி தேங்காய் விலை 5.4 வீதம் அதிகரிப்பு

Kanimoli
1 year ago
வாராந்த ஏலத்தில் இலங்கையின் சராசரி தேங்காய் விலை 5.4 வீதம் அதிகரிப்பு

ஒக்டோபர் 27ஆம் திகதி நடைபெற்ற வாராந்த ஏலத்தில் இலங்கையின் சராசரி தேங்காய் விலை 5.4 வீதம் அதிகரித்திருந்தது.

இது தொடர்ச்சியாக ஐந்தாவது வாரமாக பதிவான அதிகரிப்பு என்று  உத்தியோகபூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இலங்கையின் தென்னை அபிவிருத்தி அதிகார சபையினால் நடத்தப்பட்ட ஏலத்தில் 1,000 தேங்காய்களுக்கான சராசரி விலை ஒரு வாரத்திற்கு முன்னர் 62,037.99 ஆக இருந்த நிலையில்  65,387.84 ஆக உயர்ந்துள்ளது.

ஏலத்தில் 580,619 தேங்காய்கள் கொள்வனவு செய்யப்பட்டன. மேலும் 480,225 தேங்காய்கள் விற்பனை செய்யப்பட்டன.

இதேவேளை மழைக்காலம் காரணமாக கடந்த இரண்டு மாதங்களாக விளைச்சல் குறைந்துள்ளதால், விலை அதிகரித்து, 2023 ஜனவரி பிற்பகுதியில், அடுத்த பயிர் சந்தைக்கு வரும் வரை தேங்காய்களில் விலை ஏற்றம் இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதற்கிடையில் ஜனவரி முதல் ஆகஸ்ட் வரையிலான காலகட்டத்தில் தேங்காய் சார்ந்த பொருட்களின் ஏற்றுமதி 7 சதவீதம் அதிகரித்து 573 மில்லியன் டொலர்களாக வருமானத்தை அதிகரித்திருந்தது.