கொழும்பு மேயர் பதவிக்கு போட்டியிடும் முஜிபுர் ரஹ்மான் அரசியல் தரப்புத் தகவல்கள் வெளியாகியுள்ளது

Kanimoli
1 year ago
கொழும்பு மேயர் பதவிக்கு போட்டியிடும் முஜிபுர் ரஹ்மான்  அரசியல் தரப்புத் தகவல்கள் வெளியாகியுள்ளது

ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் கொழும்பு மாநகர சபையின் மேயர் பதவிக்கு போட்டியிட உள்ளதாக அரசியல் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேயர் பதவிக்கு போட்டியிட கட்சியின் தலைமைத்துவமும் ஏற்கனவே அனுமதி வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது. கொழும்பு நகரில் சிறுபான்மை மக்களின் வாக்கு வங்கி முக்கிய பங்கு வகிப்பதன் காரணமாக முஜிபுர் ரஹ்மான் மேயர் பதவிக்கு போட்டியிட்டால் சாதகமான நிலைமை ஏற்படும் என ஐக்கிய மக்கள் சக்தியில் பலர் கருதுகின்றனர்.

முஜிபுர் ரஹ்மான் கொழும்பு மாநகர சபையின் மேயர் பதவிக்கு போட்டியிட உள்ளார் என்பதற்கான தகவலை நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டாரவே வெளியிட்டிருந்தார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் மத்திய கொழும்பு தொகுதி அதிகார சபைக் கூட்டத்தில் அவர் இதனை சூசகமாக கூறியிருந்தார். கொழும்பு மாநகர சபையின் பதவிக்காலம் இந்த வருட இறுதியில் முடிவடையவுள்ளது.

முஜிபுர் ரஹ்மான் கொழும்பு மாநகர சபைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக சுயேட்சைக்குழுவின் சார்பில் கடந்த 2006 ஆம் ஆண்டு தாக்கல் செய்த வேட்புமனு, வேட்பாளர் ஒருவர் தொடர்பான சிக்கல் காரணமாக நிராகரிக்கப்பட்டது.