கிலோ கோதுமை மாவின் விலையை 250.00 ரூபாவாக குறைக்க முடிவு

Kanimoli
3 years ago
கிலோ கோதுமை மாவின் விலையை 250.00 ரூபாவாக குறைக்க முடிவு

1 கிலோ கோதுமை மாவின் விலையை 250.00 ரூபாவாக எதிர்வரும்; பண்டிகைக் காலம் முடியும் வரை பேணமுடியும் அத்தியாவசிய உணவுப் பொருட்கள் இறக்குமதியாளர்கள் மற்றும் வர்த்தகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும் கோதுமை மாவின் விலை குறைக்கப்பட்டதன் பயனை நுகர்வோருக்கு வழங்குமாறு வெதுப்பக உரிமையாளர்களிடம் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
1 கிலோகிராம் கோதுமை மாவின் மொத்த விலை 250 ரூபாவாக நேற்று முதல் குறைக்கப்பட்டுள்ளதாக சங்கத்தின் பேச்சாளர் நிஹால் செனவிரத்ன தெரிவித்தார்.
அக்டோபர் 28 முதல் டிசம்பர் 31 வரை அமுலுக்கு வரும் வகையில் திறந்த கணக்கு மூலம் கோதுமை மாவை இறக்குமதி செய்ய அரசாங்கம் அனுமதித்ததன் விளைவாக கோதுமை மா குறைப்பு ஏற்பட்டது.
எவ்வாறாயினும், கோதுமை மாவின் விலை குறைக்கப்பட்ட போதிலும், வெதுப்பக பொருட்களின் விலைகள் குறையவில்லை என நுகர்வோர் குற்றம் சுமத்தியுள்ளனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4