பிரித்தானிய ராணி கமிலா சென்ற விமானம் சேதம்

Kanimoli
2 years ago
பிரித்தானிய ராணி கமிலா சென்ற விமானம் சேதம்

இந்தியாவிலிருந்து பிரித்தானியா திரும்பிய ராணி கமிலாவின் விமானம் பறவைத் தாக்குதலுக்கு உள்ளாகியதாக தெரியவந்துள்ளது.

பிரித்தானிய மன்னர் மூன்றாம் சார்லஸின் மனைவி, ராணி கமிலா, இந்தியாவின் பெங்களூர் நகரத்திலிருந்து பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானத்தில் லண்டன் ஹீத்ரோ விமான நிலையத்திற்கு பறந்து கொண்டிருந்த போது இந்த சம்பவம் நடந்தது.

பறவை மீது தாக்கியதில் அந்த விமானத்தின் மூக்கு பகுதி சேதமடைந்துள்ள நிலையில் விமானத்தின் மூக்கில் பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது.

இந்த சம்பவம் குறித்து பக்கிங்ஹாம் அரண்மனை தரப்பில் இருந்து எந்த கருத்தும் தெரிவிக்கப்படவில்லை.

ராணி கமிலா தனது நண்பர்களுடன் அக்டோபர் 20 அன்று பெங்களுருவில் உள்ள சௌக்யா (Soukya) எனும் ஆரோக்கிய மையத்திற்கு சென்றார்.

சுமார் ஒரு வாரகாலம் அங்கே தங்கியிருந்தார். அவருக்கு பாதுகாப்பாக ராயல் ப்ரொடெக்ஷன் ஸ்குவாட் காவலர்கள் அவருடன் இருந்ததாக கூறப்படுகிறது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!