காற்றோட்டம் அற்ற இடத்தில் தடுத்துவைத்திருப்பதன் காரணமாக தோல்நோய் பாதிப்பிற்குள்ளாகியுள்ள வசந்த முதலிகே

Prasu
2 years ago
காற்றோட்டம் அற்ற இடத்தில் தடுத்துவைத்திருப்பதன் காரணமாக தோல்நோய் பாதிப்பிற்குள்ளாகியுள்ள வசந்த முதலிகே

அனைத்து பல்கலைகழக மாணவர் ஒன்றிய ஏற்பாட்டாளர் வசந்த முதலிகேயை போதிய  காற்றோட்டம் அற்ற சூரியவெளிச்சம் படாத இடத்தில் தடுத்துவைத்திருப்பதன் காரணமாக அவர் தோல்நோய் பாதிப்பிற்குள்ளாகியுள்ளார் 

டெங்கு காரணமாக பாதிக்கப்பட்டுள்ள அனைத்து பல்கலைகழ  பிக்குகள் சம்மேளனத்தின் ஏற்பாட்டாளர்  கல்வே ஸ்ரீதம்ம தேரறிற்கு உரிய வசதிகள் வழங்கப்படவில்லை எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஊடகங்களிற்கு கருத்து தெரிவித்துள்ள வசந்த முதலிகேயின் சகோதரர்  அனுர முதலிகே  வசந்த முதலிகே தனது சகோதரர் மிகக்குறைந்தளவு வசதிகளுடன் தடுத்துவைக்கப்பட்டுள்ளார்,அவரை ஏன் மோசமான நிலையில் தடுத்துவைத்துள்ளனர் என்பதற்கான காரணங்களை தெரியாத நிலையில் பயங்கரவாத விசாரணை பிரிவினர் உள்ளனர் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

வசந்தமுதலிகே தடுத்துவைக்கப்பட்டுள்ள இடத்தில் போதிய காற்றோட்ட வசதிகளோ அல்லது சூரிய ஒளியே இல்லாததன் காரணமாக அவர் தோல்நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார் எனவும் சகோதரர் தெரிவித்துள்ளார்.

வசந்த முதலிகேயின் கழுத்து உட்பட உடல் பகுதிகள் தோல்தொற்று நோய் பாதிப்பிற்குள்ளாகியுள்ளன.பயங்கரவாத விசாரணை பிரிவினர் அவரை தேசிய வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர் மருத்துவர்கள் சில மருந்துகளை வழங்கியுள்ளனர் ஆனால் பயங்கரவாத விசாரணை பிரிவினர் அதனை வழங்கவில்லை எனவும் வசந்த முதலிகேயின் சகோதரர் தெரிவித்துள்ளார்.

தங்களிடம் குறிப்பிட்ட மருந்து போதியளவு இல்லை என பயங்கரவாத விசாரணை பிரிவினர் தெரிவித்தனர் பின்னர் நாங்கள் அந்த மருந்தை வாங்கிக்கொடுத்தோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

14000 ரூபாய்க்கு மருந்தை வாங்கிக்கொடுத்தோம்  ஆனால் மோசமான சூழ்நிலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ளதால் அவர் இன்னமும் குணமடையவில்லை என வசந்த முதலிகேயின் சகோதரர் தெரிவித்துள்ளார்.

தங்காலை பழைய கடற்படை தளத்தில் உரிய வசதிகள் இல்லாததன் காரணமாக  இருவரையும் நாரஹன்பிட்டியில் உள்ள பயங்கரவாத விசாரணை பிரிவில் தடுத்துவைத்துள்ளதாக பயங்கரவாத விசாரணை பிரிவினர் தெரிவித்துள்ளனர் என  சுட்டிக்காட்டியுள்ள அனுரமுதலிகேயின் அரசாங்கத்தினால் முடியாவிட்டால் இருவருக்குமான உணவு மருத்துவ செலவுகளை ஏற்க தயார் எனவும் தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!