அமெரிக்க சபாநாயகரின் கணவரை தாக்கியவர் மீது கடத்தல் மற்றும் தாக்குதல் குற்றச்சாட்டுக்கள்
அமெரிக்க சபாநாயகரின் கணவரை தாக்கியவர் மீது கடத்தல் மற்றும் தாக்குதல் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன.
மூத்த அரசியல்வாதியான நான்சி பெலோசியை கடத்த முயன்றதாகவும், அவரது கணவரை தாக்கியதாகவும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
42 வயதான அவர், கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலை பேலோசியின் சன் பிரான்சிஸ்கோ வீட்டிற்குள் நுழைந்து போல் பெலோசியை (82) சுத்தியலால் தாக்கியதாக குற்றம் சாட்டப்பட்டார்.
இதன்போது அமெரிக்க சபாநாயகர் நான்சி பெலோசியையும் தேடியதாக கூறப்பட்டுள்ளது.
எனினும் அமெரிக்காவின் ஜனாதிபதி பதவிக்கு அடுத்த இரண்டாவது இடத்தில் இருக்கும் நான்சி பெலோசி அந்த நேரத்தில் வீட்டில் இருக்கவில்லை.
இந்த தாக்குதலின் நோக்கம் விசாரிக்கப்பட்டு வருகிறது ஆனால் இது "தற்செயலான செயல் அல்ல" என்று காவல்துறையினர் கூறுகின்றனர்.
டேவிட் டெபேப் என்ற குறித்த தாக்குதல்தாரி, அமெரிக்க அதிகாரி ஒருவரின் குடும்ப உறுப்பினரை பழிவாங்கும் வகையில் செயற்பட்ட குற்றத்துக்காக 30 வருடங்கள் சிறைத்தண்டனை வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அத்துடன் நான்சி பெலோசியை கடத்த முயன்றதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது, இதற்கு அதிகபட்சமாக 20 ஆண்டுகள் அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்தேகநபர் கைதுசெய்யப்பட்ட போது அவரிடம் நாடா, கயிறு, இரண்டாவது சுத்தியல்கள் என்பன இருந்ததாக நீதித்துறை தெரிவித்துள்ளது.
எனவே அவர்,நான்சி பெலோசியை பிணைக் கைதியாகப் பிடிக்கத் திட்டமிட்டிருந்தார் என்று நீதித்துறை கருதுகிறது.
சான்பிரான்சிஸ்கோ சிறையில் அடைக்கப்பட்டுள்ள குறித்த தாக்குதல்தாரி, இன்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படுவார்.