அதிரடியாக செயற்படும் எலான் மாஸ்க் ஒரே அறிவிப்பில் வெளியேற்றப்பட்ட 9 பேர்!

#world_news
Nila
2 years ago
அதிரடியாக செயற்படும் எலான் மாஸ்க் ஒரே அறிவிப்பில் வெளியேற்றப்பட்ட   9 பேர்!

எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தின்  உரிமையாளரானதை தொடர்ந்து அவர் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.

டெஸ்லா மற்றும்  ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தை  நடத்தி வரும் உலகின் முன்னணி பணக்காரரான எலான் மஸ்க்,  பிரபல சமூக ஊடக நிறுவனமான ட்விட்டரையும் அவர் கடந்த வாரம் தன் வசப்படுத்தினார்.

தற்போது ட்விட்டர் இயக்குநர் குழுவை அதன் உரிமையாளரான எலான் அதிரடியாக நீக்கியுள்ளார்.

ட்விட்டர் நிறுவனத்தின் இயக்குநர் குழுவில் உள்ள 9 பேரையும் ஒரே அறிவிப்பில் நீக்கி அவர் அதிரடி காட்டியுள்ளார். இயக்குநர் குழுவில் தற்போது தான் மட்டுமே இருப்பதாகவும், ட்விட்டரின் தலைமை செயல் அதிகாரியாக தான் இருப்பதாகவும் எலான் மஸ்க் அறிவித்துள்ளார்.

அதேவேளை முன்னதாக ட்விட்டர் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக இருந்த பராக் அகர்வால் உள்ளிட்ட தலைமை நிர்வாகிகளை அவர் நீக்கியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.   

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!