அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ன், எபின் நகரில் வசிக்கும் இலங்கை குடும்பத்தின் வீடு தீயில் எரிந்து நாசம்
Kanimoli
2 years ago
அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ன், எபின் நகரில் வசிக்கும் இலங்கை குடும்பத்தின் வீடு தீயில் எரிந்து நாசமாகியுள்ளது.
இலங்கையின் பிரபல தொலைக்காட்சி நாடக மற்றும் திரைப்பட நடிகரான ஸ்ரீநாத் மத்துமகே என்பவரின் வீடே இவ்வாறு தீக்கிரையாகி உள்ளது.
ஸ்ரீநாத் மத்துமகே மற்றும் அவரது மனைவி வேலைக்குச் சென்றிருந்ததாகவும், அவர்களது மகள் வகுப்பிற்கு சென்றிருந்த வேளையில் விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிய வருகிறது.
அவுஸ்திரேலியாவில் கடுமையான குளிரான காலநிலை நிலவுகின்றது. எனவே, வீட்டை சூடாக்க ஹீட்டர் தொடர்ந்து இயங்கியதால், அது வெடித்து தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த விபத்து தொடர்பில் மெல்பேர்ன் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.