பாகிஸ்தான் தேர்தல் ஆணைய தலைவரிடம் ரூ.100 கோடி நஷ்டஈடு கேட்டு வழக்கு தொடரவுள்ள இம்ரான்கான்

#Pakistan #ImranKhan
Prasu
1 year ago
பாகிஸ்தான் தேர்தல் ஆணைய தலைவரிடம் ரூ.100 கோடி நஷ்டஈடு கேட்டு வழக்கு தொடரவுள்ள இம்ரான்கான்

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கானின் பாகிஸ்தான் தெஹ்ரிக் இ இன்சாப் கட்சி, தடைசெய்யப்பட்ட நாடுகளிடம் இருந்து நிதி பெற்றதாக எழுந்த புகார் குறித்து அந்த நாட்டு தேர்தல் ஆணையம் விசாரித்து வந்தது. 

இதில் அக்கட்சி முறைகேடாக நிதி பெற்றதை உறுதி செய்த தேர்தல் ஆணையம் அக்கட்சியின் தலைவரான இம்ரான்கானை எம்.பி. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்தது. 

இந்த நிலையில் பாகிஸ்தானில் முன்கூட்டியே பொதுத்தேர்தலை நடத்த வலியுறுத்தி தலைநகர் இஸ்லாமாபாத் நோக்கி இம்ரான்கான் பிரமாண்ட பேரணியை நடத்தி வருகிறார். 

நேற்று 4-வது நாளாக பஞ்சாப் மாகாணத்தில் நடந்த பேரணியில் பங்கேற்று பேசிய இம்ரான்கான் தன்னை தகுதி நீக்கம் செய்ததன் மூலம் தனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்திய பாகிஸ்தான் தேர்தல் ஆணையத்தின் தலைவர் சிக்கந்தர் சுல்தான் ராஜாவுக்கு ரூ.100 கோடி கேட்டு அவதூறு வழக்கு தொடரப்போவதாக கூறினார்.