அதிகாரப்பூர்வ டுவிட்டர் கணக்கு என்பதை உறுதிபடுத்திக்கொள்ள கட்டணம் வசூலிக்க டுவிட்டர் நிறுவனம் திட்டம்

#Twitter #ElonMusk
Prasu
2 years ago
அதிகாரப்பூர்வ டுவிட்டர் கணக்கு என்பதை உறுதிபடுத்திக்கொள்ள கட்டணம் வசூலிக்க டுவிட்டர் நிறுவனம் திட்டம்

கடந்த வாரம் ட்விட்டர் மற்றும் எலான் மஸ்க் இடையே நிறுவனத்தை விலைக்கு வாங்கும் பரிவர்த்தனை நிறைவு பெற்றது. 

ட்விட்டர் நிறுவனத்தின் ஒரு பங்கு விலை 54.20 டாலர்கள் வீதம் மொத்தம் 44 பில்லியன் டாலர்கள் கொடுத்து எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை வாங்கி இருக்கிறார். 

ட்விட்டரை கைப்பற்றியதும் அந்நிறுவன தலைமை செயல் அதிகாரி மற்றும் தலைமை நிதி அலுவலர் ஆகியோரை எலான் மஸ்க் பணி நீக்கம் செய்தார்.

ட்விட்டர் நிறுவனம் வெரிபிகேஷனை பயன்படுத்த ஒவ்வொரு மாதமும் கட்டணம் வசூலிக்க திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியானது. 

தற்போது ட்விட்டர் புளூ சந்தாவுக்கு மாதம் 4.99 டாலர்கள் வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்த சேவையில் இருந்து அதிக வருவாய் ஈட்டும் வகையில், வெரிபிகேஷன் சேவையையும் இதில் கொண்டுவர ட்விட்டர் முடிவு செய்து இருப்பதாக தெரிவித்திருக்கிறது. 

இந்நிலையில், ட்விட்டர் புளூ டிக் சந்தாவுக்கான மாதாந்திர கட்டணம் 8 டாலர்கள் என எலாம் மஸ்க் அறிவித்துள்ளார்

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!