மனிதர்களை உயிருடன் புதைக்கும் வினோத சிகிச்சை - 47 லட்சம் வசூலிக்கும் ரஷ்ய நிறுவனம்

Prasu
2 years ago
மனிதர்களை உயிருடன் புதைக்கும் வினோத சிகிச்சை - 47 லட்சம் வசூலிக்கும் ரஷ்ய நிறுவனம்

மனிதர்களை உயிருடன் சவப்பெட்டியில் வைத்து மண்ணில் புதைப்பதற்கு ரஷ்ய நிறுவனம் ஒன்று 47 லட்சம் வசூலிப்பது பிரம்மிப்பை ஏற்படுத்தியுள்ளது.

ப்ரீகேடட் அகாடமி என்ற ரஷ்ய நிறுவனம் ஒன்று மனிதர்களின் பயம் மற்றும் கவலைகளை நீக்குவதற்காக அவர்களை உயிருடன் சவப்பெட்டியில் அடைத்து மண்ணில் ஒரு மணி நேரம் வரை புகைக்கும் விசித்திரமான “மனநோய் சிகிச்சை முறை” (psychic therapy) ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளனர்.

ப்ரீகேடட் அகாடமி என்ற இந்த ரஷ்ய நிறுவனம் உண்மையிலேயே திகில் மற்றும் மருத்துவ சிகிச்சை இரண்டிற்கும் இடையிலான சுவரை மெல்லிய தாக்கியுள்ளது, இதற்காக அந்த நிறுவனம் சுமார் 47 லட்சம் வரை கட்டணம் வசூலிக்கிறது.

இது தொடர்பாக நிறுவனம் அளித்துள்ள விளக்கத்தில், இந்த சிகிச்சை முறை  உங்கள் அச்சம் மற்றும் பதட்டத்திலிருந்து உங்களை விடுவிக்கும் என்றும் இது முற்றிலும் பாதுகாப்பானது என்றும் தெரிவித்துள்ளது.அத்துடன் இது உங்களை கவலையைக் கடக்க உதவுவதுடன் மட்டுமல்லாமல் சில மனநலத் திறன்களைக் கண்டறியவும் உதவுகிறது,  இந்த சிகிச்சை முறையானது ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

ப்ரீகேடட் அகாடமி  இதனை இரண்டு தொகுப்புகளாக வழங்கி வருகிறது, முதல் தொகுப்பு மேலே குறிப்பிட்டுள்ள படி, உயிருடன் முழுமையாக ஒரு மணி நேரம் மண்ணில் புதைக்கும் தொகுப்பு, இரண்டாவது 12 லட்சத்திற்கு ஆன்லைன் இறுதிச் சடங்கு பதிப்பாகும், இதில் மெழுகுவர்த்திகள் மற்றும் இறுதி ஊர்வலப் பாடல்களுடன் உங்கள் இறுதிச் சடங்கைக் காணலாம், மேலும் உங்கள் விருப்பத்தையும் நீங்களும் எழுதலாம் என்பதாகும்.

இந்த தொகுப்பு மன அழுத்தத்தைக் குறைக்கும் என்று நம்பப்படுகிறது மற்றும் அச்சம் மற்றும் கவலைகளுக்கான மன அழுத்த சிகிச்சை என்றும் அழைக்கப்படுகிறது. 

ப்ரீகேடட் அகாடமியின் நிறுவனர் Yakaterina Preobrazhenskaya தெரிவித்துள்ள தகவலில், இந்த சிகிச்சை முற்றிலும் பாதுகாப்பானது என்றும், உயிருடன் புதைக்கப்பட்டாலும், மனித உயிருக்கு எந்த ஆபத்தும் ஏற்படாது, தனது வாடிக்கையாளரின் பாதுகாப்பே முதன்மையான முன்னுரிமை என்று குறிப்பிட்டுள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!