ஈரானின் பிரபல சமையல்காரர் ஈரான் படைகளால் அடித்துக் கொலை
ஈரானில் நடந்து வரும் ஹிஜாப் எதிர்ப்பு போராட்டங்களுக்கு மத்தியில், ஈரானின் ஜேமி ஆலிவர் என்று அழைக்கப்படும் பிரபல சமையல்காரர் மெஹர்ஷாத் ஷாஹிடி, நாட்டின் புரட்சிகர காவலர்களால் அடித்துக் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.
அவரது இரக்கமற்ற கொலை ஈரானில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது, சனிக்கிழமையன்று ஷாஹிடிக்கு நடைபெற்ற இறுதிச் சடங்கின் போது ஆயிரக்கணக்கான மக்கள் வீதிகளில் இறங்கினர்.
தி டெலிகிராஃப் படி, 19 வயது இளைஞன் ஒரு போராட்டத்தின் போது கைது செய்யப்பட்டதுடன், அரக் நகரில் ஈரானின் புரட்சிகர காவலர் காவலில் இருந்தபோது பொல்லுகளால் அடித்து கொல்லப்பட்டார்.
அவரது மண்டையில் அடிபட்ட பின்னர் அவர் கொல்லப்பட்டார், இருப்பினும், ஷாஹிதியின் குடும்பத்தினர் தங்கள் மகன் மாரடைப்பால் இறந்ததாகக் கூற அழுத்தம் கொடுக்கப்பட்டதாகக் கூறினர்.
மறுபுறம், ஈரானிய அதிகாரிகள் சமையல்காரரின் மரணத்திற்கு பொறுப்பேற்க மறுத்தனர்.
7News இன் படி, ஈரானின் தலைமை நீதிபதி அப்துல்மெஹ்தி மௌசவி, அவரது கைகள், கால்கள் அல்லது மண்டை ஓட்டில் எலும்பு முறிவுகள் அல்லது மூளைக் காயம் எதுவும் இல்லை என்று கூறினார்.
இருப்பினும், சமூக ஊடகங்களில், பல பயனர்கள் அவரது மரணத்திற்கு ஈரானிய அதிகாரிகளை குற்றம் சாட்டினர்.
ஈரானிய அமெரிக்க எழுத்தாளர் டாக்டர் நினா அன்சாரி அவர் (மெர்ஷாத் ஷாஹிதி) பூட் உணவகத்தில் திறமையான இளம் சமையல்காரராக இருந்தார் என எழுதியுள்ளார்.
ஈரானில் பாதுகாப்புப் படையினரால் ஈவிரக்கமின்றி கொல்லப்பட்டார். நாளை அவருக்கு 20வது பிறந்தநாள். நாங்கள் எப்பொழுதும் மறக்கமாட்டோம். நாங்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டோம். என்று அவர் குறிப்பிட்டார்